இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் உலகில் தனது சிருஷ்டிப்புகளை 6 நாட்களில் செய்து முடித்தார். அவர் தமது வல்லமைமையுள்ள வார்த்தையினால் அதை நிலைநிறுத்துகிறார். அவருடைய மகிமைக்காக கிறிஸ்து நம்மை மறுபடியுமாய் வந்து நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரையிலும் அவருடைய சித்தத்தை தொடர்ந்து நம்மேலும் நமக்குள்ளும் கிரியை நடப்பித்துக்கொண்டே இருக்கிறார்! (பிலிப்பியர் 2:12-13 ஐப் பார்க்கவும்)

என்னுடைய ஜெபம்

என் வாழ்க்கையில் கிரியை நடப்பித்ததற்காக உமக்கு நன்றி தகப்பனே . சில சமயங்களில் நீர் தொலைவில் இருப்பதாகத் தோன்றினாலும், என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை திரும்பிப் பார்க்கும்போது, ​​உம்முடைய கைகளின் கிரியையையும் , உம் கிருபையையும் இன்று நான் இருக்கும் இந்த இடத்திற்கு கொண்டுவந்திருக்கிறது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். அன்பான பிதாவே , நான் உமது விருப்பத்தை நாடி, உமது மகிமைக்காக வாழ அர்ப்பணிப்புடன் இருக்கையில், உமது பிரசன்னத்தை என் வாழ்வில் இன்னும் பெலமுள்ளதாய் தெரியப்படுத்துங்கள். என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து