இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

முதிர்ந்தவயதில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒதுக்கித் தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டும், மறக்கப்பட்டும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். அநேக வேலையாட்கள் மற்றும் தொழிற்நுட்ப முன்னேற்றம் உள்ள நிர்வாகரீதியான உலகில் இது மெய்தான் . வயதானவர்கள், விதவைகள் மற்றும் எளியவர்கள் ஆகியோரை புறக்கணித்து , ​​வாலிபர்கள் அல்லது பொருளாதார ரீதியாக அதிக பெலன் வாய்ந்தவர்களிடம் அநேக வேளைகளில் ஆதரவாக நடந்துகொள்ளுகிறார்கள் இது திருச்சபைகளில் இருப்பது உண்மையாகும் . நம் அந்தஸ்து, தோற்றம் அல்லது வயது எதுவாக இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் என்ன நடக்கிறது என்பதில் தேவனானவர் அக்கறை காண்பிக்கிறார் என்பதை நினைவில் கொள்வோம். வயதைப் பொருட்படுத்தாமல் ஒருவரையொருவர் அன்புடனும், கனிவுடனும் நடத்துவோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, உம் வாக்குத்தத்தம் என்னை ஒருபோதும் கைவிடாது அல்லது நெகிழவிடாது என்பதை நான் அறிவேன் (எபிரேயர் 13:5-6). கிறிஸ்து இயேசுவின் மீது அடியேன் கொண்ட அன்பிலிருந்து எதுவும் என்னைப் பிரிக்க மாட்டது என்ற உம் வாக்குறுதியை நான் விசுவாசிக்கிறேன் (ரோமர் 8:32-39). ஆனால் பிதாவே , வயதில்முதிர்ந்தவர்களை , மறந்துவிட்ட பலரைப் பார்க்கிறேன், நான் வயதாகும்போது தனிமையையும் பலவீனத்தையும் சந்திக்க நேரிடும் என்று எண்ணி நான் கொஞ்சம் பயப்படுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளகிறேன் . என் கவலைகளையும் பாரங்களையும் உம் மீது வைத்துவிடவும் , உம் அன்பான பிரசன்னத்தை நம்பவும் எனக்கு விசுவாசத்தையும் தைரியத்தையும் தாரும் (1 பேதுரு 5:7). பிதாவே, ஜீவனிலும் மரணத்திலும், ஆரோக்கியத்திலும், வியாதியிலும், இளமையிலும், வயதிலும் என் சரீரத்தில் நீர் மகிமைப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இயேசுவின் மகிமையான நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து