இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பயம் நமது மனஉறுதியை குறைத்து, நம்மை தொய்வடையச் செய்து, நம்பிக்கையற்றவர்களாய் உணர செய்கிறது . ஆயினும்கூட, இந்த நம்பிக்கையின் செய்தியை ஏசாயா பகிர்ந்துகொண்டபோது, ​​ தேவனுடைய ஜனங்கள் எதிர்கொண்டது போன்ற முழுமையான மற்றும் கசப்பான தோல்வியை நம்மில் மிகச் சிலரே அனுபவித்திருக்கிறோம். இஸ்ரவேலர்கள் இயேசுவின் காலம் வரைக்கும் அவர்கள் கடந்துவந்த பயங்கரங்களில் உரிய பாதுகாப்பு, எல்லாம் முடிந்து போயிற்று என்கிற வேளையில் இயேசுவானவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தது , பல நூற்றாண்டுகளாய் துன்பங்களிலும் , துயரங்களிலும் மற்றும் எதிர்ப்பின் மூலமாய் திருச்சபை பெற்றதான வெற்றி இவை அனைத்தும் ஒரு வல்லமையும், அன்பும் நிறைந்த நித்திய கரங்களின் கீழே நாம் இருக்கிறோம் என்பதே பெலமுள்ள நினைப்பூட்டுதலாகும் . இன்னுமாய் இவ் உலகத்தின் முடியவில் அவரது நித்திய ஜெய ஜீவியத்தில் பங்கடையும்படியாய் நம்மை அழைத்துக்கொண்டு வருவார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் நித்திய பிதாவே , நீர் எப்பொழுதும் எங்களோடு இருக்கிறீர் என்பதை அறிவது மிகவும் இனிமையான ஆறுதல். எப்போதும் அங்கு இருப்பதற்காகவும் எனது ஜெய ஜீவியத்திற்கு வாக்கு அளித்ததற்காகவும் உமக்கு நன்றி! இயேசுவின் நாமத்தினாலே அடியேன் கேட்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து