இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லாம் நமக்கு உடனே வேண்டும்! நாம் எதற்காகவும் காத்திருக்க விரும்புவதில்லை. ஆனால் தேவனுக்கென்று ஒரு கோட்பாடுள்ளது அது மிகவும் இன்றியமையாதது : நாம் கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் பின்பு அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார். எனவே, சிறிய மற்றும் மதியற்ற காரணங்களுக்காக நீதியுள்ள தேர்வுகளை நாம் தள்ளுபடிச் செய்யக்கூடாது. இவற்றை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பது நாம் யார் என்பதை வெளிப்படுத்துகிறது மற்றும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள பிதாவே, தயவுக்கூர்ந்து என் எல்லாச் செயல்களிலும் உண்மையுள்ள மற்றும் நீதியுள்ள வழியைக் கண்டறிய எனக்கு ஞானத்தை கொடுங்கள். கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாய் இருக்க விரும்புகிறேன், அதனால் இராஜ்யத்தின் அநேக காரியங்களின் மேல் அதிகாரியாக வைக்க முடியும் என்று நம்புகிறேன். தயவுக்கூர்ந்து என் இருதயத்தை பரிசுத்தம்செய்து, தாலந்துகளை உபயோகித்து, என்னுடைய கிரியைகளினால் உமக்கு மகிமை கொண்டுவர வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து