இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மிடையே மிகுந்த உற்சாகத்துடனும் , மகிழ்ச்சியுடனும் , நம்பிக்கையுடனும் இருப்பவர்கள் கூட, அவர்கள் வாழ்வில் சவாலான நேரங்களை எதிர்கொள்ளும்போது, ​​உடைந்தும் , சத்துவமில்லாமலும் , சோர்வடைந்து போவதையும் நம்மால் காணமுடிகிறது. நாம் கழுகுகளை போல செட்டைகள் அடித்து உயர பறக்கும் போதும் அல்லது ஓடும்போதும், தேவனோடு நடக்கும்போதும், சோர்வடையாமல் இருக்கும்போதும் இயேசுவை நம்புவதும், பின்பற்றுவதும் கடினமாக இல்லை. எவ்வாறாயினும், கலக்கமில்லாமல், ஒரு கால்களை மற்றொன்றின் முன் வைக்க முயற்சிக்கும்போது, நம் நம்பிக்கையை துடிப்புடன் வைத்திருப்பதற்கான மிகவும் சவாலான நேரம் அதுவாகும். நாம் முழுமையாக சத்துவமில்லாமல் , பலவீனமாக மற்றும் உடைந்துப் போன தருணங்களில் தேவனானவர் சத்தியபரராக , வல்லமைமிக்கவராக மற்றும் நம்மோடு இருக்கிறவராக இருக்கிறார் . எனவே, அவரது சமூகத்தை அறிந்துக்கொள்ளவும், உணர்ந்துக்கொள்ளவும் ஜெபிப்போமாக .

என்னுடைய ஜெபம்

தேவனே , சாத்தான் என்னைத் தாக்கியபோது, ​​வாழ்க்கையின் சவால்கள் மற்றும் கஷ்டங்களால் நான் சோர்வடைந்தபோது, ​​என்னைத் தாங்கி, என் நம்பிக்கையை உயிர்ப்பித்ததற்காக உமக்கு நன்றி. நான் நேசிப்பவர்கள் சோர்வாகவும் , பலவீனமாகவும் இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தி செல்வதற்கான பெலனைத் தாரும் ... (உங்களுக்குத் தெரிந்த குறிப்பிட்ட நபர்களுக்காகப் ஜெபிக்கவும் , வாழ்க்கையில் முன்னேற தேவனுடைய உதவி தேவை!) ஆண்டவரே ! நீர் அவர்களுக்கு உதவும், அவர்களின் பெரிய மீட்பராக மீட்கும்படி கிருபையுடன் மறுபடியுமாய் வருகிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் , நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து