இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான் (அப்போஸ்தலர் 4:12). நாம் மனுஷர்களுக்கு முன்பாக இயேசுவானவரை அறிக்கை செய்ய வேண்டும், நாம் அப்படி செய்யும் போது, ​​அவரும் பரலோகத்திலுள்ள பிதாவுக்கு முன்பாக நம்மை அறிக்கைபண்ணுவார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன், நம்முடைய இரட்சகர் மற்றும் கர்த்தர். இந்த வார்த்தைகளுக்குப் பின் உள்ள அனைத்து சத்தியத்தின் கோட்பாடுகளையும் நாம் அறியாமல்கூட இருக்கலாம் - பேதுருவும் இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கையிடும்போது அவ்வாறு அறிந்துகொள்ளவில்லை - ஆனால் நாம் அவரை முழுமையாக புரிந்துகொள்ளும் வரை, அவருடைய வார்த்தையை கைக்கொள்ளவும் பின்பற்றவும் தீர்மானம் எடுப்போம் . அவருடைய வார்த்தைகளுக்கு நம் இருதயங்களைத் திறந்து, அவரைப் பற்றிய முழுமையான அறிவையும் அனுபவத்தையும் நோக்கிய பயணத்தைத் தொடங்கும்படி இயேசுவானவர் நம்மைக் கேட்கிறார்.

என்னுடைய ஜெபம்

ஜீவனுள்ள தேவனே , பரிசுத்த பிதாவே , என்னை மீட்டெடுக்க இயேசுவை உமது குமாரனாக அனுப்பினீர் என்று நம்புகிறேன். இயேசு என் வாழ்வின் ஆண்டவராக இருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் அறிக்கையிடுகிறேன் , ஏனென்றால் அவர் உம்முடைய குமாரனாகவும் என் இரட்சகராகவும் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். உம்முடைய குமாரன் மூலமாகவும், வேதத்தில் வாக்களிக்கப்பட்ட கிறிஸ்து மூலமாகவும், இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து