இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிறு பிள்ளைகள் அதிக மேன்மையாக எண்ணாத காலக் கட்டத்தில் , இயேசு அவர்கள் மேல் காண்பிக்கும் அன்பு நமக்கு ஒரு வல்லமையான நினைவூட்டலாகும். இந்த உலகம் அடிக்கடி தூற்றுகிறதான அல்லது கைவிடுகிறதான காரியங்களுக்கு தேவனின் அன்பை நினைவூட்டுகிறது. நாம் நேசிக்கப்படாத, மறக்கப்பட்ட, மோசம் போகப்பட்ட மற்றும் கைவிடப்பட்டவர்களை அன்புக்கூர அழைக்கப்படுகிறோம். ஏன்? ஏனென்றால் அப்படித்தான் எகிப்தில் இஸ்ரேவேல் இருந்தது, அப்படித்தான் இயேசுவானவர் கல்வாரியில் இருந்தார், அப்படித்தான் நாமும் கிருபையின்றி இருந்தோம் (ரோமர் 5:6-11). இப்பொழுதோ,இரட்சிப்பை அறிந்தோம் என்று கூறி, அந்த கிருபை தேவைப்படும் மற்ற மக்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது எப்படி!? நாம் இயேசுவின் சீஷர்கள் என்று கூறிக்கொண்டு, உலகம் மறந்தவர்களிடம் அன்பு காட்டாமல் இருப்பது எப்படி?

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் உம்மைப் போன்ற ஒரு பெற்றோராக இருக்க விரும்புகிறேன் — என் சொந்த பிள்ளைகளுக்கு பரிசுத்தமான மற்றும் அன்பான பெற்றோராகவும், இன்றைய மறக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு அன்புள்ள பெற்றோராகவும் இருக்க விரும்புகிறேன். என் உலகில் உள்ள பிள்ளைகள் கைவிடப்பட்டதான சூழ்நிலையிலும் மற்றும் மோசம் போக்குதலினாலும் துன்பப்படுகிற அவர்களுக்காக தூண்டப்படுவதுமல்லாமல், அவர்களை ஆசீர்வதிக்கும் வழிகளில் செயல்படவும் எனக்கு உதவுங்கள். எல்லா சிறு பிள்ளைகளின் அன்பான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து