இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்க்கை நடுநிலையாக இருக்காது. நாம் மற்றவர்களை தேவனிடமிருந்து விலகும்படியாய் செய்வோம் அல்லது தேவனிடத்தித்தில் விசுவாசமாயிருப்பது முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம் . நாம் செய்யும் செயலினாலும்,பேசும் வார்த்தையினாலும் தேவனின் பரிசுத்தம் மற்றும் கிருபையின் ஒளியைப் பிரகாசிக்க இன்றே முயற்சி செய்வோம்.

என்னுடைய ஜெபம்

தேவனே , என் வாயின் வார்த்தைகளும், என் வாழ்க்கையின் செயல்களும், என் செயல்களின் செல்வாக்கும் மற்றவர்களுக்கு உமது பரிசுத்தத்தையும் கிருபையையும் வெளிப்படுத்தி , உமது மகத்துவத்தையும் வல்லமையையும் அங்கீகரிக்க அவர்களை வழிநடத்தும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து