இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தண்ணீருள்ள நதிகள் - வறண்ட நம்பிக்கைகளுக்கு ஜீவத்தண்ணீர் , வறண்டுப்போன இருதயங்களுக்கு குளிர்ந்த நீர், சோர்வுற்றவர்களுக்கும், இளைத்துப்போனவர்களுக்கும் புத்துணர்ச்சியூட்டும் நீர். இது நிச்சயமாக, நம் உதடுகளால் நாம் குடிக்கக்கூடிய ஒரு திரவத்தை விட மிக அதிகம். தேவனானவர் நம்முடைய ஆத்துமாவுக்கு இறுதியாக கொடுக்க விரும்பும் நீர் இது. இதுவே பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுவைத் தம் பிள்ளைகளுக்கு கொடுக்க அனுப்பினார். இயேசுவின் வாக்குத்தத்தங்களினால் நம்மைப் புதுபெலத்தோடும், புத்துணர்ச்சியோடும் , நாம் அவரை நெருங்கும்போது, ​​ஆவியானவர் நம் ஆத்துமாக்களை மீட்டெடுப்பார், ஆவியின் ஜீவத்தண்ணீர் நமக்குள்ளே ஓடும் என்று நம்பி ஆகஸ்ட் மாதத்தைக் கழிப்போம்.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே, என்னை இரட்சிக்க இயேசுவை அனுப்பியதற்காகவும் , என்னைத் தாங்கி புதுப்பித்து என்னுள்ளே உமது பிரசன்னமாக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரை அனுப்பியதற்காக உமக்கு நன்றி.குறிப்பாக இந்த மாதத்தில் அடியேன் என் இரட்சகரிடம் நெருங்கி வரவும் , உமது பரிசுத்த ஆவியின் புத்துணர்ச்சியூட்டும் ஜீவத் தண்ணீரால் என் ஆத்துமாவை மீட்டெடுக்கவும் நான் முயல்வதால், அடியேனை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து