இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் ஒருவரை முதல் அபிப்ராயத்தைக் கொண்டு நியாந்தீர்ப்பதினால்,எவ்வளவு நல்ல நண்பர்களை இழந்திருக்கிறீர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதல் அபிப்ராயம் மற்றொரு நபரைப் குறித்து பல விஷயங்களை நமக்கு எப்படிச் சொல்கிறது என்பதில் நான் வியப்படைகிறேன். மனிதர்களின் இருதயங்களில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் நாளில் வெளிப்படுத்தும் வரை நாம் உண்மையில் அவர்களை சரியாக மதிப்பீடு செய்ய முடியாது. அவர்களைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன் அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்த அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?! வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்க வேண்டாம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , ஒவ்வொரு இருதயத்தையும் நீர் மாத்திரமே அறிவீர். மற்றவர்களைப் பற்றிய கருத்தை புரிந்துகொள்ளும் வரை அவர்களிடம் பொறுமையாக இருக்க எனக்கு உதவியருளும் . இயேசுவைப் போல அவர்களைப் பார்க்கும்படியாய் எனக்கு கண்களைத் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து