இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"தனித்து வா." நாம் விட்டுவிலகி வரவேண்டும் - எப்பொழுதாவது ஒரு முறை அல்ல, ஆனால் அடிக்கடி, தினமும் கூட! நம்பமுடியாத வகையில், இயேசு தம் சீஷர்களை (இன்று, அது நாம் தான்!) அவருடன் அமைதியான இடத்திற்குச் சென்று அவரோடே கூட இளைப்பாறுமாறு அழைக்கிறார். சிறு பிள்ளையை போன்ற ஜெபம் பொருத்தமானது: "இப்போது நான் நித்திரை செய்யும்படி என்னைக் கிடத்தி, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்படி தேவனை நோக்கி வேண்டிக்கொள்கிறேன்." இது ஒரு நல்ல இரவு நித்திரையை பற்றியது மட்டுமல்ல; இது நம்முடைய கடினமான மற்றும் நிலையற்ற நாட்களின் நடுவில் சிறிது நேரம் எடுத்து கொண்டு அவருடைய கிருபைக்காகவும் , இளைப்பாறவும், புத்துணர்ச்சிக்காகவும் அவருடன் சேர வேண்டும். விரைவான மின்னஞ்சலைப் பார்ப்பதை விட, தேவனுடைய வார்த்தையில் அனுதினமும் நின்று வாசித்து கவனம் செய்வோம்; மற்ற காரியங்களுக்கு விலகி இரட்சகரோடு இளைப்பாரும் நேரமாக இருக்கட்டும். இயேசு இன்னும் நம்மை அழைக்கிறார்: "வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்."

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், இரக்கமுள்ள மேய்ப்பரே, என் ஆத்துமாவை அமைதிப்படுத்துபவரே , உம்முடைய நிலையான கவனிப்பு மற்றும் அன்பான உண்மைத்தன்மைக்காக உமக்கு நன்றி. உம்முடன் இளைப்பாறும் நேரத்தில் நான் மிகவும் ஒழுக்கமாக இருக்க முயற்சிக்கும்போது தயவுசெய்து என் இருதயத்தைத் தொடும்படி கேட்கிறேன் . தயவு செய்து என் ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள், ஆனால் இன்னும் அதிகமாக, உம் குமாரனும் என் இரட்சகராகிய இயேசுவோடும் நேரத்தைச் செலவிட நான் தனித்து செல்லும்போது தயவுசெய்து என் ஆத்துமாவை மீட்டெடுத்துக்கொள்ளும் , அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து