இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பு சந்தோஷத்தைக் கொண்டுள்ளது . அந்த சந்தோஷத்தில் ஒன்று எதில் உண்மை , நிஜம் , சரியானது உள்ளதோ - சத்தியம் ! எனவே, இயேசுவுடைய சீஷர்களாக இருப்பதால் நாங்கள் கபடமுள்ளவர்களாகவோ , சூழ்ச்சி செய்கிறவர்களாகவோ அல்லது எங்கள் உறவுகளில் வற்புறுத்துகிறவர்களாகவோ இருப்பதில்லை. அதற்குமாறாக நாங்கள் வெளிப்படையாகவும், நெருக்கமாகவும், உண்மையாகவும் இருக்கிறோம். ஏன் ?ஏனென்றால் உண்மையான அன்பு சத்தியத்திலே சந்தோஷப்படும்.

என்னுடைய ஜெபம்

அன்பும் உண்மையுமுள்ள கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் நீங்கள் என் இதயத்தில் உம் அன்பை ஊற்றும்போது, ​​ என்னுடைய அன்பு உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் , வஞ்சகம், தந்திரம் மற்றும் கபடமில்லாமலும் இருக்கும்படி தயவுக்கூர்ந்து செம்மைபடுத்துங்கள் . இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து