இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் பரிசுத்தமும் , நீதியும் , நியாயமுமானவர். ஆனால், இந்த குணங்கள் மிக மிக முக்கியமானதாக இருப்பதால் , அவற்றை அவர் உருக்கமும், கிருபையும் , பொறுமையும் மிகுந்த இரக்கத்தினாலும், அன்பினாலும் வெளிப்படுத்துகிறார். நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறவர்களாகவும் , ஆராதனை செய்கிறவர்களாகவும் , பயத்தோடே மதிக்கிறவர்களாகவும் மாத்திரம் இருக்க கூடாது, நாம் அவரை நேசிக்கிறவர்களாகவும் , போற்றுகிறவர்களாகவும் , தொழுதுகொள்ளு கிறவர்களாகவும் இருக்க வேண்டும் ! எப்படியாயினும் , நம்முடைய சொந்த வாழ்க்கையில் தேவனின் குணாதிசயத்தை பிரதிபலிப்பது மிகப்பெரிய சவாலாகவும் இருக்கும்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, நான் உம்மை விசுவாசிக்கிறவனாக மாத்திரமல்லாமல், உம்முடைய உண்மையையும், இரக்கத்தையும், அன்பையும், கிருபையையும், மிகுந்த உருக்கத்தையும் நான் போற்றுகிறவனாகவும் இருக்கச் செய்யும் . தயவுக்கூர்ந்து இந்த நற்பண்புகள் ஒவ்வொன்றையும் இன்னும் முழுமையாகக் காண்பிக்க அடியேனுக்கு உதவியருளும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து