இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் முற்றிலும் சோர்ந்து , நொறுங்கி , உடைந்து போன வேளைகளில் , ​​நம் ஆத்துமாவானது தேற்றபட வேண்டும்! ஆனால் நம் ஆத்துமாவை யாரால் தேற்ற முடியும்? அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நம்மை மெய்யாகவே வழிநடத்தக்கூடிய ஒரே ஒருவர்: கர்த்தர் தாமே ,அவரே நம்முடைய நல்ல மேய்ப்பராக இருக்கிறார். சோர்வுற்ற நம் ஆத்துமாவுக்கு தேவையான போஷாக்கையும் , நிரப்புதலையும், இளைப்பாறுதலையும் , புதுப்பித்தலையும் அவரால் மட்டுமே முழுமையாகக் கொண்டுவர முடியும். ஆயினும், அவரோடே கூட அமைதியாக இருக்க நேரம் ஒதுக்குவது அநேக வேளைகளில் ஏன் நமக்கு கடினமாக இருக்கிறது? நம் வாழ்க்கையை மிகவும் நேரமில்லாமல் , பரபரப்பாக வைத்திருப்பதால், மிக முக்கியமான ஒருவரை நாம் இழக்க நேரிடுமோ ? ஆம். நம் நோக்கம், போதும் என்கிற மனது மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தக்கவைக்க, நம்முடைய நல்ல மேய்ப்பனுடன் நேரத்தை செலவிடுவது. இவையே மிகவும் அவசியமான ஒன்றாகும் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , நீர் மீண்டும் மீண்டும் எனக்குக் காண்பித்த மாதிரியின் பிரகாரமாக , உம்மோடு இருப்பதினால் நீர் என் இருதயத்தை தேற்றுகிறீர் அதினால் அவற்றை வேறு யாராலும் தொட முடியாது என்பதை நான் அறிவேன். பரிசுத்தமற்ற மற்றும் உபயோகமற்ற காரியங்களில் என் போஷாக்கையும் புத்துணர்ச்சியையும் தேடுவதற்காக அடியேனை மன்னித்தருளும் . உமது சமூகம் மற்றும் வல்லமையினால் என்னை புத்துயிர் பெறச் செய்தருளும் , அதனால் நான் இன்னும் ஜெயத்துடன் உமக்கு ஊழியம் செய்ய முடியும். என் நல்மேய்ப்பராகிய , இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து