இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ரோமர் 8ஆம் அதிகாரம் தேவனின் பிள்ளைகளாகிய நம்மில் வாழும் பரிசுத்தாவியின் ஆசீர்வாதங்களை மீண்டும் மீண்டும் நமக்கு நினைப்பூட்டுகிறது. நம்மில் உள்ள ஆவியானவர் நாம் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவோம் என்பதற்கான நம்முடைய உத்தரவாதம்! அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் என்று நாம் நம்பிக்கைக் கொள்ள முடியும் . மரணம் நம்மை ஆட்கொள்ளாது, பரிசுத்தாவியானவர் கொடுக்கும் ஜீவனின் வல்லமை மரணத்தை காட்டிலும் பெலனுள்ளது. நம்முடைய சரீரம் மரித்தாலும் நாம் வாழுவோம் ! தேவனுடைய ஆவி நமக்கு ஜீவனை தந்து , ஊக்கப்படுத்தி, ஜெயத்தை பெற்றுக்கொள்ள பெலப்படுத்துகிறது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, பரிசுத்த ஆவியின் வரத்திற்காக மிக்க நன்றி. பிரபஞ்சத்தை உருவாக்க உதவிய மற்றும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய ஆவியின் வல்லமை என்னில் வாழ்கிறது என்பதை அறியும் போது வியப்பும் பிரம்மிப்பும் உண்டாகிறது, நீங்கள் எனக்குள் வாழவும், என்னை ஆசீர்வதிக்கவும், என்னை வடிவமைக்கவும், என்னை வளர்க்கவும், என்னை இயேசுவின் குறிக்கோளுக்கு இணங்கவும் தேர்ந்தெடுத்தமைக்காக நன்றி. இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து