இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்வும், எதிர்காலமும், திட்டங்களும் தேவனுடைய கரங்களில் உள்ளது . இந்த தவிர்க்க முடியாத உண்மைதான் நாம் இந்த உலகத்தில் ஜீவிப்பதற்கு அடிப்படை சத்தியம் . இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு நமக்குக் கற்றுக் கொடுத்தது உங்கள் நினைவிலிருக்கிறதா? மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். யாக்கோபு - 4:13-15 தேவனுடைய சித்தத்தில் வாழ்வதும், ஆவியானவரால் வழிநடத்தப்படுவதும் (ரோமர் 8:14; கலாத்தியர் 5:18-25) அவரோடே கூட ஒன்றாய் இருக்கும்போது நமது மகிழ்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் அடித்தளமாக இவை அமையும் . இதைப் குறித்து யோசித்துப் பாருங்கள்: நாம் ஒருவரையொருவர் சந்திப்பதும், ஒருவருக்கொருவர் ஊழியம் செய்வதும் ஏதோ ஒரு தற்செயலான நிகழ்வுகள் அல்ல. அவை தேவனுடைய கிருபையின் செயல்களாகும், அவை தேவனின் ஆசீர்வாதத்திலும் மகிழ்ச்சியிலும் புத்துணர்ச்சியிலும் பங்குகொள்ள நம்மை இவைகள் அழைக்கின்றன.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , என் வாழ்க்கையில் உம்முடைய நேரடி ஈடுபாட்டிற்காக நன்றி செலுத்துகிறேன் . உம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காகவும் , உம் வார்த்தையின் வழிகாட்டுதலுக்காகவும் , மூத்த கிறிஸ்தவர்களின் ஞானத்திற்காகவும் நன்றி கூறுகிறேன் . இவை அனைத்தும் என் வாழ்க்கையின் அர்த்தத்தை ஆழமாக்கியது மற்றும் உம் ராஜ்யத்திற்கான எனது ஊழியத்தை மேம்படுத்தியது. அடியேனால் இயன்ற போதெல்லாம் நான் கிறிஸ்தவர்களுடன் இருக்கும் போது, ​​தயவுக்கூர்ந்து எனக்கு கிருபை மற்றும் மகிழ்ச்சியின் ஆழமான உணர்வைக் தந்தருளும் . உம்முடைய குடும்பத்தில் உள்ள இந்த விலையேறப்பெற்ற அங்கத்தினர்கள், ஏதோ நான் வழியில் தற்செயலாய் சந்தித்து அறிமுகமானவர்கள் அல்ல, ஆனால் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் மற்றும் உம்முடைய மாறாத சமூகத்தை கொண்டு உம் பிள்ளைகளை புதுப்பிக்க வேண்டும் என்ற உம்முடைய விருப்பத்தின் காரியங்கள் என்று எனக்குத் நன்றாய் தெரியும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே , நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து