இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வார்த்தைகள் காரியங்களை தெரிவித்து புரியவைக்கிறது . நாம் ஒருவரை நேசிக்கிறோம் என்று நம்மால் சொல்ல முடியும். அவர்கள் நமக்கு எவ்வளவு விலையேறப்பெற்றவர்கள் என்பதை நம்மால் விளக்க முடியும். நம்முடைய செயல்கள் அதை ஆராய்ந்து உறுதிப்படுத்துகிறது . நாம் மற்றவருக்காக சுய விருப்பங்களை தியாகம் செய்யும்போது, ​​நம் மரியாதையையும் நேசத்தையும் காண்பிக்கிறோம் . நாம் நம்முடைய சிநேகிதருக்காக, நம்மையும், நம் விருப்பங்களையும், ஆசைகளையும் தியாகம் செய்யும் போது, எல்லாவற்றிற்க்கும் மேலான சிறந்த அன்பளிப்பை அவர்களுக்கு கொடுக்கிறோம், அத்துடன் நம் அன்பையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, இயேசுவை என் பாவங்களுக்காக மீட்கும் விலையாக அனுப்பும் அளவுக்கு என்னை நேசித்ததற்காக உமக்கு நன்றி.இயேசுவே, உமது அன்பான தியாகத்திற்கு நன்றி, அவைகள் என்னை இரட்சிப்பது மட்டுமல்லாமல், உம்முடைய அன்பின் முழு அளவையும் எனக்குக் காண்பிக்கிறது. இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றிசெலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து