இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எப்பொழுதாவது நீங்கள் கடைசியாக தேர்ந்தேடுக்க பட்டிருக்கிறீர்களா ? உங்கள் அணியில் யாரும் விரும்பாத ஒருவராக நீங்கள் இருந்திருக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்தது பிரமிப்பாய் இருக்கிறதல்லவா ! தலைமுறை தலைமுறைக்கும் இராஜாவும் அவருடைய குமாரனுனாகிய இயேசு கிறிஸ்துவால் நாம் வேண்டுமென்று சொல்லி நேசிக்கப்படுவது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா ! நாம் பரிதாபத்தினால் மாத்திரம் தெரிந்துக் கொள்ளப்படாமல், ஒரு வித்தியாசத்தை விளங்கச்செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம் . மேலும், நாம் நிலைத்திருக்கும் கனிகளை கொடுக்கும்படியாய் தெரிந்துக் கொள்ளப்பட்டோம்! இந்த உத்திரவாதம் அதிக கனிகளைக் கொடுக்க உதவும். தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் செய்யும் பணியில் அவருடைய ஆசீர்வாதத்தை நாம் கேட்க முடியும் என்றும் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்றும் இயேசுவானவர் வாக்களித்திருக்கிறார். இவை ஆராய்ந்து முடியாதது!

என்னுடைய ஜெபம்

தேவனே, உம்முடைய பணிகளை செய்யும்படியான இருதயத்தையும், உம் கிருபையை போல விசாலமான பார்வையையும் எனக்குத் தாரும். உமக்கு மகிமை கொண்டுவரும் காரியங்களையும், உம்முடைய இராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவாக்கவும், தொடர்ந்து என் கவனத்தை திருப்பும் வரையறுக்கப்பட்ட காரியங்களை கடந்து இலக்கை சென்றடையவும், அடியேனுடைய ஜெபம் இருக்க தயவாய் கேட்டுக்கொள்ளுகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து