இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் தம்முடைய ஞானத்தை உபயோகித்து பிரபஞ்சத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினார். அவரது நல்லாலோசனையின் மூலம், அவர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் பன்முகத்தன்மையின் திகைப்பூட்டும் காட்சியில் அதன் இடத்தை நியமித்தார். தேவனுக்கு பயந்து, ஞானத்தை தேடுவோருக்கு, அவர் மெய் ஞானத்தையும் நல்லாலோசனையையும் பகிர்ந்துகொள்ளும்படி விரும்புகிறார். நாம் அந்த ஞானத்தையும் நல்லாலோசனையையும் பயன்படுத்தினால், எல்லா ஆபரணங்களிலும் மிகவும் விலையேறப்பெற்ற மற்றும் நம் வாழ்க்கையை வளமாக்கும் ஒரு ஆசீர்வாதத்தை பெறுவோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நான் கேட்கும்பொழுது நீர் என்னை ஞானத்தினால் ஆசீர்வதிப்பீர் என்று எனக்குத் தெரியும். அன்புள்ள பிதாவே அந்த ஞானத்தை உம்மிடத்தில் கேட்கிறேன். நான் ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், அவ்வாழ்க்கை உம்முடைய குணாதிசயங்களை முற்றிலுமாய் பிரதிபலிப்பதாகவும், உமது பரிசுத்தத்தை கனப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும். நான் மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அன்றாட முடிவுகளை எதிர் கொள்ளும்போது எனக்கு ஞானத்தையும் நல்லாலோசனையும் தந்து ஆசீர்வதியும் .

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து