இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பவுலானவர், சிறைச்சாலையில் அதிக சிரமங்களை எதிர்க் கொண்டதால், தன்னைப் பற்றி கவலைப்படுவதை விட எபேசுவில் உள்ள மக்களைப் பற்றி அதிக அக்கறை கொண்டிருந்தார். பவுல், தனது சொந்த நலனுக்காக தீகிக்குவை அருகில் வைத்திருப்பதற்குப் பதிலாக, ஆசியா மைனரில் உள்ள மக்களை ஆசீர்வதிப்பதற்கு அவரை திருப்பி அனுப்பினார். அவரது உபத்திரம் மற்றும் ஆபத்து காலங்களில் கூட, பவுல் ஆசீர்வதிக்கப்படுவதை விட ஆசீர்வதிப்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். இது இன்று நமக்கு ஒரு சிறந்த உதாரணம் அல்லவா? நாம் சிறிய சிரமங்களைப் பற்றிக் கூட அடிக்கடி வருத்தப்படுகிறோம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் நம் அணுகுமுறையால் வருத்தப்பட வைக்கிறோம். பவுலினுடைய உதாரணம் நம்மை குற்றவாளியாக்கி, நம் சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வழிவகுக்கும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னுடைய உபத்திரங்கள் என் அணுகுமுறையைக் கெடுத்ததற்காக என்னை மன்னியுங்கள்.எனது தனிப்பட்ட சூழ்நிலைகள் எதுவாயினும் பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன்.நான் என் மீதும் என் சூழ்நிலை மீதும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கும் போது உம்முடைய ஆவியால் என்னை கண்டித்தருளும் . உம்முடைய கிருபையினால் என் இருதயத்தை பெரிதாக்கி அதினால் என்னுடைய சிரமங்கள், பிரச்சனைகள், போராட்டங்கள் மற்றும் சவால்களை வாய்ப்பாக உபயோகித்து உம் கிருபையை பகிர்ந்து கொள்ளவும் விளங்கச்செய்யவும் வேண்டுகிறேன் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து