இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சத்தியம் என்பது நாம் அறிந்த ஒன்றல்ல, அது நாம் வாழும் ஒன்றாகும் . அவருடைய போதனையை நாம் அறிந்துக் கொள்வது மட்டுமல்லாமல், அதற்கு கீழ்ப்படியவும் வேண்டும் என்பதை இயேசுவானவர் நமக்கு நினைவூட்டுகிறார். இருப்பினும், கீழ்ப்படிதல் என்பது நாம் சீஷராயிருக்கிறோம் என்பதற்கு சான்றாகும் மற்றும் சத்தியத்திற்கும் விடுதலைக்கும் வாசலாகும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம்முடைய சித்தத்திற்கு கீழ்படிவதை சாதாரணமாய் எடுத்து கொண்டதற்காக என்னை மன்னியும். சிலவேளைகளிலே உம்முடைய வழி கடினமாகவும், கட்டுப்படுத்துவதாகவும் தோன்றுகிறது . எனினும், அன்புள்ள பிதாவே உம்முடைய சித்தமே ஆசீர்வாதம் என்றும் அவைகள் தடையல்ல என்றும் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து முழுநிச்சயமாய் விசுவாசிக்கிறேன். மற்றவர்களும் உமக்கு கீழ்படிவதின் மூலமாய் சந்தோஷத்தை கண்டுப்பிடிக்க என்னை பயன்படுத்தி அவர்களுக்கு உதவிச் செய்யும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து