இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கடினமான மற்றும் கனமான சத்தியங்களை இயேசுவானவர் போதித்தார். கர்த்தர் அவர்களுக்கு போஜனமளித்ததாலேயே அவர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்று சொன்னதால் மக்கள் கோபமடைந்து வெளியேறினர். ஈடுபாடு குறைவான "சீஷர்கள் பின்வாங்கி, அவரைப் பின்தொடரவில்லை" என அறிந்து , இயேசு தம்முடைய நெருங்கிய சீஷர்களை நோக்கி , நீங்களும் என்னைக் கைவிடுவீர்களா என்று கேட்டார் . அதற்கு, பேதுருவின் பதில் விசுவாசத்தின் ஒப்புதல் வாக்குமூலமாக இருந்தது. எல்லா சத்தியமும் எங்கிருந்து உருவானது என்பதை அவர் அறிந்திருந்தார்! "இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று!" என்று மலையில் சொல்லும் குரலைக் கேட்டிருந்தார். (மாற்கு 9:7) இயேசுவின் வார்த்தைகள் யதார்த்தத்தை மாற்றுவதையும், இன்னும் நமது புயல்கள், தேவனின் அன்பிற்கான அனைத்து தடைகளையும் அழித்து, தேவனுடைய சத்தியத்தையும் நீதிக்கான கோரிக்கைகளையும் தெளிவுபடுத்துவதையும் பேதுரு பார்த்தார். மெய்யாகவே , நித்திய ஜீவனின் வார்த்தைகள் வேறு யாரிடமும் இல்லை என்பதை பேதுரு முழுமையாக அறிந்திருந்தார்! எனவே இயேசு நம்மிடம் வந்து, நம் வாழ்க்கையை வடிவமைக்க நாம் அனுமதிக்கும் வார்த்தைகளையும், அவரை விட்டு விலக செய்யும் காரியங்களையும் அடையாளம் காணும்படி கேட்கிறார். இயேசுவிடம் மட்டுமே நித்திய வாழ்வின் வார்த்தைகள் உள்ளன!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , அடியேனை இயேசுவிடம் கிட்டிச் சேர வகை செய்ததற்காக நன்றி. உம்முடைய அன்பின் முழு அளவைக் காண இயேசுவானவர் எனக்கு உதவுகிறார். என்னை அன்புடன் மீட்டு உம் சொந்தமாக்கிக் கொள்ள விரும்புவதைப் பற்றிய உம்முடைய நற்செய்தியைப் புரிந்துகொள்ள இயேசுவானவர் எனக்கு உதவுகிறார். சத்தியம் , கிருபை, புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கைக்காக நான் எப்போதும் இயேசுவிடம் வர விரும்புகிறேன். சிலுவையில் அறையப்பட்ட என் இரட்சகராகிய இயேசுவைத் தவிர நான் என் ஆண்டவராக ஏற்றுக்கொள்ள எவரும் இல்லை, அவர் என்மீது அன்பு காட்டினார். இன்று, பிதாவே , உம் குமாரனின் திருவருளுக்கு நான் இன்னும் முழுவதுமாக அடிபணியாத பகுதிகளில் மெதுவாக என்னைச் சரிசெய்தருளும் . இயேசுவின் மகா கனமுள்ள நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து