இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்னுடைய வார்த்தைகள் வெளிவராமல் இருதயம் பாரமாய் இருக்கும் வேளைகளிலும் தேவன் என் வேண்டுதல்களைக் கேட்கிறார் என்பது வியப்பூட்டுகிறது. நான் தெளிவாக , ஞானமுள்ளவனாக அல்லது வேண்டிக்கொள்ளும் அளவுக்கு விசுவாசமாக இருப்பதினால் மாத்திரமா . அப்படியல்ல, என்னவெனில் தேவன் தாமே கிருபையாய் தமது ஆவியை நம் இருதயத்திலே வைத்து என்னுடைய வார்த்தைகள் தெளிவாய் வெளிப்படுத்தாதையும், என் மனதால் வார்த்தைகளால் கொண்டுவர முடியாததையும் அறியச்செய்கிறார். என்னுடைய பெருமூச்சையும், ஏக்கங்களையும் , அங்கலாய்ப்பையும், இருதயம் நொறுங்குண்டதையும் தேவன் கேட்கிறார். என்னால் எவைகளை நினைக்க முடியாது என்றும் ஆனால் உணர மட்டுமே முடியும் என்றும் அவர் அறிவார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மூலமாய்,வெளிப்படுத்தாத வேண்டுதல்களுக்கு தம்முடைய பிரசன்னத்தினாலும் , கிருபையினாலும், வல்லமையினாலும் பதிலளிக்கிறார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நான் என்ன சொல்வது என்று அறியாத வேளையிலும், வெளிப்படையாக கூறமுடியாத காரியங்களிலும் நீர் அளித்த நிச்சயத்தினால் ஆறுதல்கொள்ளுகிறேன். என் ஏக்கங்களுக்கு நீங்கள் தகுந்தாற்போல் பதிலளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் எனக்கு இன்னின்ன தேவைகள் என்று எனக்குத் தெரிந்ததை விட என்னுடைய தேவைகள் இன்னதென்று நீர் அறிவீர் என்று எனக்குத் நன்றாய் தெரியும். பரிசுத்த ஆவியானவரின் மீது முழு நம்பிக்கையோடே, இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து