இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஐசுவரியத்தின் மூலம் நமது பாதுகாப்பை உருவாக்க முயற்சிப்பது மிகவும் எளிதானது, இல்லையா? ஆனால் நம் ஆதாரத்தை பூமிக்குரிய ஐசுவரியத்தின் மீது அல்லது சரீர பிரகாரமான விஷயங்கள் மீது வைத்திருப்போமானால், உலகப் பேரழிவுகள், பொருளாதாரச் சரிவுகள், பொருளாதாரத் தடைகள், தொற்றுநோய்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற காரியங்கள் ஒரு நொடிப்பொழுதில் நம் பாதுகாப்பின் அடிப்படையை அழித்துவிடும். ஆகவே, நம் நம்பிக்கை ஜீவனுள்ள தேவன் மீது வைத்திருந்தால், நம் வாழ்வில் மிகவும் முக்கியமான காரியங்கள் நம்மிடமிருந்து ஒருபோதும் எடுக்கப்படாது என்ற உறுதியுடன், நம்மைச் சுற்றியுள்ள உலகில் உள்ள யாவருக்கும் அவருடைய அநேக ஆசீர்வாதங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் !

என்னுடைய ஜெபம்

விசுவாசமும் அன்பும் நிறைந்த தேவனே , என்னுடைய அடையாளம், மதிப்புகள், நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை உமக்குள்ளாய் கண்டுக்கொள்வதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீர் அநேக வழிகளில் என்னை ஆசீர்வதித்துள்ளீர், எனவே பூமிக்குரிய செல்வம் அல்லது உடைமைகள் மீது நம்பிக்கை வையாமல் , உம் மீது முழு நம்பிக்கை வைக்க நான் நாள்தோறும் பிரயாசப்படுகிறேன் , ஆதலால் தயவுக்கூர்ந்து எனக்கு தொடர்ந்து உதவியருளும் . இப்போதும், எப்பொழுதும், சதாகாலங்களிலும் உம் ஒருவருக்கே கனமும் வல்லமையும் மகிமையும் மாட்சிமையும் உண்டாவதாக . இவை யாவற்றையும் இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து