இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கொடுமைப்படுத்துவோர், ஒடுக்குவோர், அபகரிப்போர் போன்றோரை தேவன் விரும்புவதில்லை. கொடுமையினாலும் , பயமுறுத்துதலினாலும் கட்டுப்படுத்துவோர் வெறுக்கபடத்தக்கவர்களும், கர்த்தருக்கு அருவருப்பானவர்களுமாம் . தன் அதிகாரத்தை உயர்த்துவதன் மூலம் மற்றவர்களை அபகரிப்போரை நாம் முன் மாதிரியாக கொள்ளவோ , புகழவோ அல்லது கனப்படுத்தவோ வேண்டியதில்லை .

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரும், பிதாவுமானவரே , உம்முடைய ஜனங்களை துன்புறுத்தும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் ஒடுக்குவோரின் அதிகாரத்தை உடைத் தெரியும்படி தயவாய்க் கேட்கிறேன் .இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து