இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இஸ்ரவேலர்கள், வனாந்தரத்திலே அலைந்து திரிந்தப் போது , இரவிலே அக்கினி ஸ்தம்பமும் , பகலிலே மேகஸ்தம்பமும் வழிநடத்தியதைப் போலவே , நான் இந்த உலகத்தின் வழியாய் கடந்து செல்லும் வேளைகளில், அப்படியாய் என்னையும் வழிநடத்த வேண்டும் என்று பல நேரங்களில் ஏங்குகிறேன். ஆனால் ஆவியில் தேவன் நிலைத்திருப்பதையும், என்னை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்ற வாக்குத்தத்தத்தையும் நான் எண்ணிப்பார்க்கிறேன் . நான் அவருடைய மகிமையைத் தேடினால், அடியேன் அவருடைய சித்தத்தைச் செய்யதக்க இடத்திலே கொண்டுபோய் வைத்து, இம்மையிலும் மறுமையிலும் எனக்கு மிகவும் நன்மை பயக்கும் வழிகளில் என்னை ஆசீர்வதிப்பார் என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே, நீர் விரும்பும் இடத்திற்கு அடியேன் செல்லவும் , அங்கே உம்முடைய சித்தப்படி ஊழியங்களை நிறைவேற்றவும் , நீர் அதிகமாய் விசாரிக்க விரும்பும் ஜனங்களிடத்திற்கு என்னை வழிநடத்துங்கள். உம் திருப்பணியைச் செய்ய என் இருதயத்தை ஆட்கொண்டருளும் , உம்முடைய வரவிருக்கும் மகிமையை அடியேன் ஒருபோதும் இழந்துபோகவொட்டாதேயும் . இயேசுவின் திருப்பெயரால் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து