இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இறுதியாக சொல்லப்படும் வார்த்தைகள்! கல்லூரிக்குச் செல்லும் முன் பிள்ளைகளிடத்தில் பெற்றோரின் கடைசி வார்த்தைகள்...மரண படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு அன்பானவரின் கடைசி வார்த்தைகள்... தொலைதூர இடத்திற்கு பயணம் செல்லும் முன் ஒரு நண்பரின் கடைசி வார்த்தைகள்... இந்த கடைசி வார்த்தைகள் ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்குவதால் அவற்றை நாம் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் . இயேசுவின் கடைசி வார்த்தைகள் நாம் யாவருக்கும் சுவிஷேத்தை கூறவேண்டும் என்பதே..."எல்லா மக்களையும் சீஷராக்குங்கள்! இதைச் செய்ய, நீங்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும், பின்னர் நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணவேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வது கடினமாக இல்லை, எனவே அந்த கடைசியாக கூறின கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை குறித்து நாம் என்ன செய்கிறோம்?

என்னுடைய ஜெபம்

பிதாவே எல்லா ஜனங்களும் உம்மிடத்திலிருந்து நம்பிக்கையைப் பெறுகின்றனர் , உமது கிருபையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் உற்சாகத்தை என்னுள் எழுப்ப உமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துங்கள். எனது பாதுகாப்பான ஒரு சிறிய வட்டத்திலிருந்து என்னை வெளியே கொண்டுவந்து , உம்முடைய அதிகாரம் மற்றும் கிருபாதார பலிக்கு என்னை அழைத்து, அதினால் மற்ற ஜனங்கள் உம்மை அறிந்துகொள்ளும்படி நான் அவர்களுக்கு உதவி செய்யும்படியாய் பயன்படுத்தியருளும் . இயேசுவின் இரட்சிப்பின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து