இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் சிலர் எதற்கும் தளர்ச்சியடைய மாட்டோம் ! எல்லாவற்றிற்கும் அப்படியே. நாம் "நம்மை முழுவதுமாக நிரப்ப" மற்றும் நம்முடைய சொந்த திட்டங்களில் சிக்கிக் கொள்ளும்போது, ​​நம் மேய்ப்பனாகிய கர்த்தர் நம்மை மெதுவாய் நடத்தி , இளைப்பாறச்செய்கிறார். நமக்கு ஓய்வு, நல்ல உணவு , புத்துணர்ச்சி ஆகிய இவைகள் தேவை என்று நம்முடைய மேய்ப்பன் அறிந்திருக்கிறார், ஆம், அநேக நேரங்களிலே "புல்லுள்ள இடங்களையும் ", " அமர்ந்த தண்ணீரைம் " கண்டடையும்படி நமக்கு உதவிச் செய்கிறார். நாம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெற்றபின் நம்மை நீதியும், பரிசுத்தமுமான பாதையில் வழி நடத்துகிறார். நம் வாழ்விற்கான தேவனின் திட்டம் எப்பொழுதும் கிருபையும், பின்னர் மகிமையும் என்பது சுவாரஸ்யமானது அல்லவா.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என் வெறித்தனமான வாழ்க்கையை மெதுவாக்கி, புத்துணர்ச்சி, ஓய்வு மற்றும் நல்ல உணவு கிடைக்கும் வேளைகளுக்கு என்னை வழிநடத்திச் சென்றமைக்காக நன்றி.உம்முடைய நீதியுள்ள குணாதிசயத்தை நான் மென்மேலும் வளர்த்துக்கொள்ள நீர் என்னை பக்குவப்படுத்தும்போது எனக்குத் என்னத் தேவையோ அதை நீர் தந்து வழிநடத்துவீர் என்று நான் நம்புகிறேன். மற்ற அலுவல்களில் மிகவும் பரபரப்பாய் இருந்ததினால் உம்முடைய சித்தத்தை கேட்க மற்றும் உம்முடைய கிருபைக்கு பதிலளிக்க இயலாமல் போனதற்காக அடியேனை மன்னியும் . இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து