இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்களாகிய நம்முடைய இலக்கு , சில நியாப்பிரமாண சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதோ, சில விதிகளைக் கடைப்பிடிப்பதோ அல்லது சில ஒழுக்கங்களைப் பின்பற்றுபவர்களாகவோ இருக்கக்கூடாது. மாறாக கிறிஸ்தவர்களாகிய நம்முடைய குறிக்கோள் இயேசுவின் குணாதிசயத்திற்கும் ஊழியத்திற்கும் ஒத்துப்போவதேயாகும் . இதுவே நம்மில் வாசம் செய்யும் தூய ஆவியானவரின் செயல் (2கொரிந்தியர் . 3:18) பவுல் இங்கேயும், மற்ற இடங்களிலும் (கலாத்தியர் 4:19) தெளிவுபடுத்துவது போல, மற்றவர்களுடன் வேலை செய்வதில் இதுவே அவருடைய இலக்காயிருந்தது . பெற்றோர்களாகவும், நண்பர்களாகவும்,ஆவிக்குரிய வழிகாட்டிகளாகவும் இது நமது ஊழியமாய் இருக்க வேண்டாமா?

என்னுடைய ஜெபம்

பரிசுத்த ஆண்டவரே, என் இருதயம், என் வார்த்தைகள், என் வாழ்க்கை, என் ஊழியம் மற்றும் என் கிரியைகள் ஆகிய யாவும் இயேசுவின் செயல்களுக்கு ஏற்ப மாற்றுங்கள். என் வார்த்தைகளில் மாத்திரமல்ல , என் வாழ்க்கையிலும் அவர் என் ஆண்டவராக இருக்க வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன் . இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து