இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தியாகத்துடன் மற்றவர்களுக்கு ஒப்பு கொடுக்கவேண்டும் என்ற நமது அழைப்பு, நமது தியாகத்தில் இருந்து துவங்கவில்லை, மாறாக தேவனுடைய ஆசீர்வாதத்துடன் துவங்குகிறது. இந்த அறிக்கையின் உண்மையான இலக்கணம் இப்படியாய் அமையப்பட்டால் அதாவது எல்லா இடத்திலும் "இருந்தால் "என்ற வார்த்தை "அதில் இருந்து" என்ற வார்த்தையாக மாறும்போது அவை மிகவும் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்படுகிறது! இயேசுவுக்குள்ளாய் இந்த எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்ற பிறகு நாம் இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் ! கிறிஸ்துவோடு கூட ஐக்கியப்பட்டதன் மூலம் நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். அவருடைய அன்பினாலே நாம் தேற்றப்படுகிறோம் . நாம் பரிசுத்த ஆவியானவரோட கூட ஐக்கியமாய் இருக்கிறோம் . நாம் பட்சமும்,இரக்கங்களும் பெற்றுள்ளோம்.அப்படியென்றால், நாம்,நம்முடைய கிறிஸ்தவக் குடும்பத்துடன் அவைகளைப் பகிர்ந்துகொள்ளாமல், ஒன்றாக அவருடைய ராஜ்யத்தில் இணக்கமாக வாழ வழியைக் எப்படி கண்டுபிடிக்க முடியும்?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, நீர் இயேசுவுக்குள்ளாய் என்னை மிகவும் அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறீர் . என்னுடைய ஆவிக்குரிய குடும்பத்தில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னிடமிருந்து அதே ஆசீர்வாதங்களைப் பெறுவதை பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும் . இயேசுவின் நாமத்தினாலும், அவர் என்மீது பொழிந்த அளவற்ற கிருபையாலும், என் இருதயத்தில் நன்றியுடனும் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து