இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த வேதாகமத்தில் முற்காலத்திலே கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று உங்கள் நினைவிலிருக்கிறதா? "உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?" அதற்கு காயீன் மாறுத்திரமாக : "நான் என்ன என் சகோதரனின் காவலாளியா?" அதே கேள்விக்கு அப்போஸ்தலனாகிய பவுலின் தெளிவான மற்றும் மறுக்க முடியாத பதில் ஆம் என்பதாகும் ! நாம் நம்முடைய காரியங்களை மாத்திரம் கண்ணோக்காமல் மற்றவருடைய தேவைகளையும் கண்நோக்கி பார்க்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , உம்மைப் போலவே உம் குடும்பமாகிய திருச்சபையை நேசிக்க எனக்குக் கற்று தாரும் . என் சொந்த அலுவல்களிலும், பிரச்சனைகளிலும் நான் மிகவும் சிக்கித் தவிக்கிறேன், என்னைச் சுற்றியுள்ளவர்களைக் கவனிக்க அநேக வேளை மறந்து விடுகிறேன். அவர்களுடைய தேவைகளை அறிய விழிப்புணர்வையும், மேலும் அதற்கு இணங்கியும் வளர எனக்கு உதவியருளும் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து