இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகத்திலுள்ள எல்லாவிதமான காரியங்களும் நம்மை ராஜ்யத்தின் காரியங்களிலிருந்து திசைதிருப்பலாம். அனுதின வாழ்க்கையின் காரியங்களினால் உண்டாகும் சோர்வானது , நமது ஆவிக்குரிய காரியங்களின் மீது நம் கவனத்தை கடினமாக்குகிறது. செல்வச் செழிப்புடன் இயங்கும் இச்சமுதாயத்தில், ஐசுவரியத்தின் மீதான ஆசையும், உலகப் பொருளின் மீது நம் நாட்டமும், செல்வத்தின் மீதான நமது சுயநலமும் நம்மை அந்த கண்ணியில் சிக்க வைக்கிறது . இந்த வாழ்க்கையின் மீது உள்ள கவலைகள் நம் விசுவாசத்தை முடக்கிவிடும். இறுதியில், நற்செய்தியின் நன்மை அடைக்கப்படுகிறது, மேலும் நாம் நமது ஆவிக்குரிய பெலனை இழக்கிறோம். நம்முடைய விலையேறப்பெற்ற ஐசுவரியமானது இயேசுவுக்குள்ளாய் காணப்படுகின்றது , அழிந்துபோகும் அல்லது நம்மிடமிருந்து திருடப்படக்கூடிய பொருட்களில் அவைகள் இல்லை . அவர் நம்முடைய விலையேறப்பெற்ற பொக்கிஷமாக இருக்கிறப்படியினால் , அவருடைய ராஜ்யமே நமக்கு முதன்மையானதாக இருக்க வேண்டும், அப்பொழுது நம் வழியில் வரும் மற்ற விஷயங்களை நாம் எளிதாக கையாளலாம் (மத்தேயு 6:33).

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , நீர் என் மீது அளவற்று பொழிந்த ஆசீர்வாதங்களை மெய்யாக பயன்படுத்த எனக்கு உதவியருளும் . தயவு செய்து, பரிசுத்த ஆவியானவரே, என்னிடம் உள்ள பொருட்களால் நான் வஞ்சிக்கப்படாதபடி அல்லது சொந்தமாவதினால் அதின் மீது நம்பிக்கை வைக்க அனுமதிக்காதீர்கள், என்னிடம் இல்லாததின் மீது நான் ஆசைப்படமால் இருக்க உதவியருளும் . கர்த்தராகிய இயேசுவே, உமது ராஜ்யத்தின் காரியங்களை விட்டு என் இருதயம் எப்பொழுதும் விலகாமல் இருக்கும்படி உதவி செய்தருளும் . தயவு செய்து உமது கிருபை நிறைந்த இருதயத்தின் கனியை உயிர்ப்பித்தருளும் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து