இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் இனவெறி மற்றும் தனிமைப்படுத்துவதை வெறுக்கிறேன். ஆனால் என் வெறுப்பு இந்த விஷயங்களை குறித்து தேவனின் வெறுப்புடன் ஒப்பிடும்போது பொருந்தவில்லை. மறுபுறம், நாம் பரலோகத்தின் அநேகவிதமான மக்களை எதிர்பார்க்கலாம் (வெளிப்படுத்தின விஷேசம் 7:9 ஐப் பார்க்கவும்.) நாம் இயேசுவில் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு மாறாக கோத்திரம் , வெவ்வேறு பாஷைக்காரர் , கலாச்சாரம் அல்லது மற்றவர் மீது கொண்டுள்ள சந்தேக பார்வை ஆகியவை நாம் ஒருவரையொருவர் நேசிப்பதிலிருந்து தடுக்கக்கூடாது ஏனென்றால் நாம் முன்னமே இரட்சகரால் அன்புக்கூரப்பட்டிருக்கிறோம் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, உமது மக்களை இனம் அல்லது கலாச்சாரம் அல்லது சலுகையின் அடிப்படையில் பிரிக்கும் எந்தவொரு சுவரையும் இடிக்க உமது ஆவியும் உமது கிருபையும் எங்களுக்கு உதவுமாறு நான் பிரார்த்திக்கிறேன். நீர் செய்யும் வழியில் எல்லா மக்களையும் நேசிக்க எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள், எனக்குக் கற்றுக் கொடுங்கள். எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்காகவும் மரித்த இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து