இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் அநீதியையும் , அநியாயத்தையும் , கொடுமையையும்,துன்புறுத்தலையும் வெறுக்கிறார். இவ்வுலகில் வாழ்கிறதான பேராசைக்காரர் , கொலைப்பாதகர் , திருடர், விபச்சாரக்காரர் ... வெட்கத்திலிருந்தும், இழிவான நடத்தையிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் , தேவன் மாத்திரமே நீதியுள்ளவர், நீதியை நடப்பிப்பார் என்று வாக்குரைத்திருக்கிறார், ஆகையால் துன்மார்க்கர்கள் என்றுமே ஜெயிக்க மாட்டார்கள் . இயேசுவை நேசிப்பவர்களும் சேவிப்பவர்களும் எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் அவர் திரும்புவதை எதிர்பார்க்கும் அதே வேளையில், பொல்லாதவர்களும் இழிவானவர்களும் தேவனுடைய கரங்களில் விழுவது எவ்வளவு அதிக பயங்கரமான காரியம் என்பதை அறிவார்கள் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , என் பரலோகத்தின் பிதாவே , யாதொரு குற்றம் செய்யாதவர்கள் , பெலவீனர்கள், ஆதரவற்றவர்கள், பின்தங்கியவர்கள் மற்றும் உடைக்கப்பட்டவர்கள் ஆகிய இவர்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு நீதி வழங்குவீர்கள் என்பதை அறிந்து நான் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் ஆறுதலையும் அடைகிறேன் . ஒருவரும் இழந்துபோவதை பார்க்க நான் வெறுக்கிறேன். கொடுமையுள்ளவர்கள் நல்லவர்களும், இரக்கமுள்ளவர்களும் தெய்வ பக்தியுள்ளவர்களுமானவர்களுக்குத் தீமை செய்யும்போது நான் இன்னும் அதிகமாய் வெறுக்கிறேன். இவ் உலகத்திலுள்ள சாத்தானானவன் விழுங்கலாம் என்று எண்ணுகிறவர்களுக்கு மத்தியில் அடியேன் நிற்க எனக்கு அதிக தைரியத்தை தாரும் . அவருடைய கிருபையினாலும்,பாவம் மற்றும் மரணத்தின் மீது வெற்றியின் காரணமாகவும், இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change