இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மாறுபாடான விஷயத்தை குறித்து எத்தனை முறை இது "தவறானது " என்று சொன்னீர்கள். என்னைப் பொறுத்தவரை, நான் நினைவுகூர விரும்புவதை விட இது அநேகமுறை நிகழ்கிறது. இந்த தலைப்பில் இயேசுவின் வார்த்தைகள் உண்மையில் என்னை குற்றப்படுத்துகிறது . "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் பேச்சிலுள்ள மோசமான வார்த்தைகள் மற்றும் தவறான நேரத்தில் கூறும் வார்த்தைகள் போன்றவை சமூக செயல்கள் மற்றும் நல் நடத்தை போன்ற காரியங்களை விட நம் இருதயத்திற்கு அதிக பிரச்சனைகளை விளைவிக்கின்றன . தேவன் நம்முடைய இருதயத்தை அவருடைய சித்தத்திற்கும் உணர்வுகளுக்கும் நேராய் பரிசுத்தம்செய்யவும், சரிசெய்யவும், ஒருமுகப்படுத்தவும் நாம் கேட்போமாக.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, அன்பும் இரக்கமுள்ள பிதாவே, தயவுசெய்து என் இதயத்தை அனைத்து தீமை, வெறுப்பு, மாறுபாடு, பொல்லாப்பு, பிறருக்கு கெடுதல் நினைக்கும் எண்ணம், இச்சை, பேராசை ஆகியவற்றிலிருந்து பரிசுத்தப்படுத்தும். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்திலே , தயவுசெய்து என் இதயத்தை பரிசுத்தகுலைச்சலாக்கி , என் ஆத்துமாவை காயப்படுத்தும் எந்த தீய எண்ணங்களையும் அல்லது கவர்ந்திழுக்கும் சோதனையையும் .என்னைவிட்டு விலக்குங்கள். என் இதயத்தை அன்பு, கிருபை , நீதி, பரிசுத்தம், சாந்தம் , நீடியபொறுமை ,ஞானம் , தைரியம், நம்பிக்கை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றால் நிரப்புங்கள் . எந்த தருணத்தில் இந்த குணங்கள் தேவை என்பதை அறிய எனக்கு பகுத்தறிவை கொடுங்கள்.உம் பரிசுத்த ஆவியால் என் சரீரம் , ஆவி, ஆத்துமா ஆகியவற்றை பரிசுத்தப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து