இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேடுங்கள் - இடைவிடாமல் பின்தொடருங்கள் - உங்கள் வாழ்க்கையை விட தேவனின் அதிகாரம் மற்றும் நீதியை நம் அன்றாட வாழ்வில் தேடவேண்டும் என்று அவர் விரும்புகிறார். நீங்கள் பின்பற்றும் மற்ற விஷயங்கள் அனைத்தும் நிலையற்றவை. தேவனும் அவருடைய ராஜ்யமும் மட்டுமே என்றுமே நிலையானது. தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் பின் தொடரும்போது , யார் அந்த ராஜ்யத்தையும் நீதியையும் உங்களுக்குத் தந்த தேவன் என்றும் , இந்த உலக வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையான அனைத்து காரியங்களையும் யார் உங்களுக்கு கொடுத்து ஆசீர்வதித்தார் என்பதையும் அறிந்துகொள்ளுவீர்கள் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த ஆண்டவரே, என் ஆத்துமாவின் வாஞ்சைகள் யாவும் நிறைவேற்றப்படுவது உமக்குள்ளாய் மாத்திரமே என்று நான் அறிவேன் . என் கண் கண்ட அநேக விஷயங்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு எனக்கு சலிப்பை உண்டாக்குகிறது . நான் பின்பற்றிய இந்த உலகத்தில் உண்டான விஷயங்கள், என் அடிமைத்தனமான நாட்டங்கள் அனைத்தும், என்னை வெறுமையாகவும் அடிமையாகவும் விட்டுவிட்டன. நான் உமக்குள்ளாக மாத்திரமே நம்பிக்கையையும் உதவியையும் காண்கிறேன். தயவுக்கூர்ந்து அன்பு, சீர்திருத்தம், ஒழுக்கம், வழி நடத்தல் ஆகியவற்றில் என்னோடு இருந்து உம்முடைய பரலோகத்தின் மகிமையை அடைய என்னை வணையுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து