இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய உறுதியான ஈவு , அவரே தேவனுடைய முத்திரை மற்றும் வாக்குறுதியாயிருக்கிறார் . பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் ஜீவ பலியான மரணம் துவங்கி, நம்முடைய விசுவாசம் மற்றும் ஞானஸ்நானத்தின் மூலமாய் அவைகளில் பங்கடைய செய்து , அவற்றை இயேசுவின் இரண்டாம் வருகையிலே நிறைவு செய்யும் வரை ஆவியானவர் நமக்கு வாக்காயிருக்கிறார் . ஆனால், இந்த மாபெரும் வாக்குறுதியை உலகத்தால் புரிந்து கொள்ள முடியாது, அது போல வேதாகமத்தில் உள்ள வசனங்களின் பெரும்பகுதியின் அர்த்தத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியின் கிருபையின் ஈவு இல்லாமல், அவர்களின் கண்கள் தங்கள் விரல்களால் தொடக்கூடியதை மாத்திரமே காண்கிறார்கள் , மேலும் தேவனுடைய இருதயத்தில் உள்ள காரியங்களையும், அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தையும் முழுமையாக அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

என்னுடைய ஜெபம்

பிதாவே , இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, பரிசுத்த ஆவியானவரை அனுப்பியதற்காக நன்றி. அடியேனை ஒருபோதும் தனியாக விட்டுவிடாததற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதைப் போல, என் விருப்பமும் என் வாழ்க்கையும் உம் சித்தத்தையும், குணாதிசயத்தையும் இன்னும் முழுமையாக பிரதிபலிக்கும் வரை என்னை இன்னும் அதிகமாய் ஆவியானவரால் நிரப்பியருளும் . இப்போது உம்முடைய பிரசன்னம் என்னை ஆசீர்வதிப்பது போல மற்றவர்களையும் ஆசீர்வதிக்க என்னை பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து