இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உம்மைப் குறித்து எனக்கு அதிகமாக தெரியாது , ஆனால் அடியேன் தேர்ந்துதெடுக்கும் மிக கடினமான முடிவுகள் நன்மைக்கும், தீமைக்கும் இடையே உள்ளதல்ல என்று அறிவேன் . எனக்கு பொதுவாக எது நன்மை அல்லது எது தீமை என்று நன்றாய் தெரியும், குறிப்பாக பொல்லாத காரியங்கள் தீமை நிறைந்தது என்று அறிவேன். நல்லது, சிறந்தது மற்றும் மிக சிறந்தது ஆகிய இவைகளில் ஒன்றை நான் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் வேளைகள் மிக கடினமான ஒன்றாகும் . தேவன் மீதுள்ள என்னுடைய அன்பு பொதுவாக என் பலவீனத்தை ஜெயித்து , பொல்லாத காரியங்களை காட்டிலும் நன்மையான காரியங்களை தேர்ந்தெடுக்க செய்கிறது. ஆனால் தேவனுடைய வசனத்திற்கு முன் அடியேனை நிறுத்தி, ஜெபத்திலே என் இருதயத்தை ஊற்றி அவரிடம் ஒப்புக்கொடுக்காவிட்டால் , நல்லது எது?சிறந்தது எது?என்பதைத் தேர்ந்தெடுப்பது எனக்கு மிகவும் சவாலாக அமைந்துவிடும் . ஆயினும், இன்று தேவன் நம்மைக்கொண்டு நடப்பிக்க விரும்புகிறவற்றில் பெரும்பாலானவை அவருடைய மனதின் விருப்பத்திற்கு குறைவாகவே இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் அவர் நம்மை சிறப்பாக வழிநடத்த ஏங்கும்போது நாம் இதுபோதும் என்கிற மனப்பான்மையை கொண்டுள்ளோம் !

என்னுடைய ஜெபம்

கிருபையும்,சர்வ வல்லமையும் கொண்ட தேவனே , உமது வழிகளை எனக்கு போதித்தருளும் , உமது இருதயத்தை எனக்குத் தாரும் , நான் உம்மை நேசிப்பது மட்டுமல்லாமல், உமது சித்தத்தை அறிந்து, உமது வழிகளைப் பற்றிய நுண்ணறிவைப் பெற முயற்சிக்கிறேன். இன்று செய்ய வேண்டிய சிறந்த காரியங்களை அறிந்து கொள்ளவும், என் வேலையில், என் குடும்பத்துடன், என் நண்பர்கள் மத்தியில், குறிப்பாக கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக அறியாதவர்களுக்கு முன்பாக உம்முடைய சித்தத்தை அறிந்து வாழவும் என் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்தவும் எனக்கு உதவியருளும் . என் இரட்சகரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து