இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்க்கையை சரியான பாதையில் வைப்பதற்கும்,தேவனின் சித்தத்திற்கும், கிரியைக்கும் நம் இதயத்தை ஒப்புக் கொடுப்பதற்கு ஒரு வழி என்னவென்றால் நாம் தொடர்ந்து மகிமையுள்ள ஆண்டவரைத் துதிப்பதாகும் . பாடல் மற்றும் மனப்பாடம் செய்யப்பட்ட வேதவாக்கியங்களுடன் நம் உதடுகளால் தேவனை துதிப்போம். அவருடைய அற்புதமான மற்றும் மகத்தான செயல்களை நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்குச் சொல்வோமாக . அவர் நமக்காக செய்த அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி சொல்வோம்.அவர் எப்போதும் நம்முடன் இருப்பது போலவே (சங்கீதம் 139ப் பார்க்கவும்), அவரை எப்போதும் துதிப்போமாக.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, அன்பும் நித்தியானந்தமுமுள்ள பிதாவே, உம்முடைய சிருஷ்டிப்பில் வெளிப்படுத்தப்பட்ட உம் மகத்தான வல்லமை மற்றும் நம்பமுடியாத சிருஷ்டிப்புக்காக நான் உம்மை துதிக்கிறேன். வானத்தின் பெரும் பரப்பில் வெளிப்படுத்தப்பட்ட உம்முடைய பரந்த தன்மையையும் புரிந்துகொள்ள முடியாத மகிமையையும் கண்டு நான் வியக்கிறேன்.உம் வல்லமை , இரக்கம் , விசுவாசம்,கிருபை , உம் மக்களுக்காக நீர் காட்டிய அக்கறை மற்றும் நீர் வாக்களித்தபடியே உம் குமாரனை அனுப்பியது ஆகிய அனைத்திற்காகவும் உமக்கு நன்றி. தேவனே நீர் அற்புதமானவர். நீர் மகத்துவமானவர், நீர் மேன்மையுள்ளவர். நீர் என்னை நேசிப்பதற்காக நன்றி. இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து