இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த இணையச் செய்தியைப் படிக்கக்கூடிய பெரும்பாலானவர்களுக்கு, இந்த வசனத்தின் உணர்வுகள் அந்நியமாகத் தெரிகிறது. ஆனால் உபத்திரவத்தை குறித்து கூர்ந்து படிப்பவர்களில், கிறிஸ்துவின் விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள்ளான நம் முன்னோர்கள் மிகப் பெரிய அளவிலான உபத்திரவத்தை சகித்துக்கொண்டிருக்கிறார்கள். நம்பிக்கையை பொறுத்துக்கொள்ளக்கூடிய வசதியான இடங்களில் வாழும் நம்மைப் போன்றவர்களுக்கும், கிறிஸ்தவர்கள் "நம்பிக்கையற்றவர்கள்" அல்லது சற்றும் பழக்கமில்லாதவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கும் ,சாதகமற்ற சூழ்நிலையில் நாம் வாழும் வாழ்க்கையானது, கலாச்சாரத்திலிருந்து பிரித்து காணப்படுவதற்காகவும் அவைகள் கவனிக்கதக்கதாய் இருப்பதற்காக நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அதே வேளையில் , நரகத்தின் மேல் விசுவாசம் வைத்து கோபாக்கினைக்கு ஆளாகும் உலகெங்கிலும் உள்ள மற்ற விசுவாசிகளுக்காகவும் நாம் ஜெபிக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

மாபெரும் மீட்பரே, உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுதினமும் சகித்து, இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு உம் நாமத்தினால் கூப்பிடும் அநேகர் இங்கு உள்ளனர். அவர்கள் மனம் தளராமல், தங்கள் நம்பிக்கையை கைவிடாமல் இருக்க நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். இந்த துன்புறுத்தலின் காலத்திலிருந்து நீர் அவர்களுக்கு மீட்பை அளிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்களின் பாடுகள் மற்றவர்களுக்கு வல்லமை வாய்ந்த சாட்சியின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதனால் மற்றவர்கள் இயேசுவின் மிகுந்த மதிப்பையும் அவர்மீதுள்ள எங்கள் விசுவாசத்தையும் காண வருவார்கள். இதை நான் இயேசுவின் பரிசுத்தமான மற்றும் விலையேறபெற்ற நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து