இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய சொந்த பலத்திலன் மேல் மேன்மைபாராட்ட நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. நம்முடைய ஜீவனை நம்மால் பாதுகாக்க முடியாது. நம்மால் ராஜ்யங்களை வீழ்த்த முடியாது. வானத்தின் விளிம்பை நம்மால் பார்க்க முடியாது. நம்மால் எதிர்காலத்தை தீர்மானிக்கவோ, கடந்த காலத்தை மாற்றவோ முடியாது. நம்மிடம் என்ன இருக்கிறது, நாம் எதை குறித்து மேன்மைபாராட்ட முடியும் ? தேவன் ! அவருடைய கிருபைக்கும் இரக்கத்திற்கும் நாம் ஜீவனுள்ள ஆதாரமாயிருக்கிறோம் - நாம் அதற்கு தகுதியில்லாத போதும் அவர் நம்மை இரட்சித்திருக்கிறார், நம்முடைய ஜீவனை பாதுகாக்க பெலனில்லாதபோதும் அவர் நம்மை மரணத்தினின்றும், பாவத்தினின்றும் மீட்டெடுத்தார். துக்கம் நிறைந்தவர்கள், உடைக்கப்பட்டவர்கள், இருளில் உள்ளவர்கள் யாவரும் எங்களை நோக்கி பார்த்து மகிழ்ச்சியடையலாம், ஏனெனில் நாம் ஒரு ஜீவனுள்ள சாட்சி, தேவன் பாவிகளை இரட்சிக்கிறார், இருதயம் நொறுங்குண்டோர்களை குணமாக்குகிறார், உடைக்கப்பட்டவர்களை கட்டுகிறார். ஆண்டவருடைய மகிமைக்காக அவரை துதிப்போம். ஆண்டவருடைய கிருபைக்காக அவரை துதிப்போம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே உமக்கு நன்றி ! நீர் எனக்கு செய்த எல்லா நன்மைக்காகவும் உமக்கு நன்றி. என்னிலே நீர் நடப்பிக்கிற கிரியையை மற்றவர்கள் காணும்படியாகவும், அதேபோல அவர்களுடைய வாழ்விலும் நீர் பெரிய காரியங்களை செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவிச் செய்தருளும். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து