இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் மூன்று ஆண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தேன். அப்பாவுக்கு ஒரு கோட்பாடு இருந்தது: ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு நாளும் தன் தன் ஆற்றலை வெளிப்படுத்தி குறிப்பிட்ட அளவு வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். அதை தினமும் செய்ய வில்லை என்றால், வீடு விரைவில் வாழ முடியாததாகிவிடும், எனவே அவர் தினமும் வெளியே சென்று வீட்டின் தேவைக்காக எப்போழுதும் கடினமாக உழைப்பார் . அப்பாவுக்கு இந்த நீதிமொழிகளின் வசனம் 19:15-ஐ மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை - ஏனென்றால் அது அவருடைய மரபணுவில் உள்ளது ! வளர்ந்த பிறகு, கடின உழைப்பின் முக்கியத்துவத்தை நான் மதிக்கவில்லை. நான் வாழும் பகுதியில் அதை தற்செயலாக "கடினம் " என்று அழைக்கவில்லை! அந்த சிறுவயதில், சிறுவனாக என் அப்பா சொன்ன வேலைகளை செய்யாமலேயே ("ஊரைசுற்றி திரியும் பிள்ளையாக ," அதுதான் சாலமனின் சோம்பேறி, "அசதியான மனிதன்") ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதில் திருப்தியாய் இருந்தேன். நான் வயது சென்றபோது , என் கைகளால் கடினமாக உழைப்பதினால் அநேக நற்குணங்கள் இருப்பதைக் கண்டேன், அதே சமயம் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதினால் எந்த பயனுமில்லை என்று உணர்ந்தேன் . வாரத்தின் முதல் நாளில் உண்மையான ஓய்வுடன் தேவனை கனப்படுத்துவர்களையும் மற்றும் அசதியாய் ஓய்வு எடுப்பவர்களையும் ஒன்றாக எண்ணி ஒப்பிட்டு நம்மை குழப்பிக் கொள்ளக் கூடாது, ஏனென்றால் அந்த காரியம் வரும் வாரத்திலே கடினமாக உழைக்க நம்மை தயார்படுத்த உதவும்.!

என்னுடைய ஜெபம்

எல்-ஷடாய், எல்லாவற்றிற்கும் மேலான தேவனே , வேலைக்கும் ஓய்வுக்கும் இடையே சமநிலையை எனக்குக் கற்றுத்தாரும் . இரண்டையும் சமநிலைப்படுத்த எனக்கு உதவுங்கள், இதன் மூலமாக அடியேன் உமக்கு கனத்தை கொண்டுவரவும் , என் இருதயம் மற்றும் என் நேரத்தின் மீது உமது கிருபையான ஆட்சியைக் காண்பிக்கவும் முடியும். அநேக பலன்களை கொடுப்பவனாய் , கடின உழைப்பாளியாய் மற்றும் மரியாதைக்குரியவனாக இருக்கும்படி எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து