இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தனியாக பாடலாம் அந்த பாடலை தேவன் விரும்புகிறார் என்றறிவது நல்லது அல்லவா ! நாம் துதித்துப் பாடும்போது, மற்றவர்களுடன் இணைந்து, நம்மை மறந்து அவருடைய அதிசயத்தை, அன்பை, மகிமையை பாடுவது இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா ? இன்றே மற்ற விசுவாசிகளைக் கண்டுபிடித்து ஒருமித்து தேவனை துதிப்போமாக. உலகெங்கிலும் , நூறாயிரக்கணக்கான வலிமையானவர்கள், மற்ற விசுவாசிகளை அணுகி, தேவனை மகிமைப்படுத்துவதில் எங்களுடன் சேரும்படி கேட்போமாக !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும் , இரக்கமுமுள்ள தேவனே, தயவுசெய்து எனது துதியிலும் , மற்றவர்களுடன் சேர்ந்து உமக்கு மகிமை சேர்ப்பதற்கான எனது முயற்சிகளிலும் மகிழ்ச்சி அடையுங்கள்.பாவங்கள், சறுக்கல்கள் மற்றும் தவறுகளுக்காக என்னை மன்னியுங்கள். உம்முடைய அற்புதமான கிருபைக்காக ஜீவனுள்ள சாட்சியாக இருக்க எனக்கு அதிகாரம் அளியுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து