இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் சமீபத்தில் கர்த்தரைத் தேடினீர்களா?கடந்த வாரம் நம் அனைவரின் வாழ்க்கையையும் அவரிடம் திருப்புவோம் என்று நம்மில் பலர் உறுதியளித்தோம்; அந்த உறுதிமொழியை நீங்கள் எப்படி செய்தீர்கள்? கேட்பவர்களுக்கும் சந்தேகம் கொள்ளாதவர்களுக்கும் தேவன் ஞானத்தை உறுதியளிக்கிறார். நீங்கள் சமீபத்தில் ஞானத்தைக் கேட்டீர்களா?நம் இதயங்களை ஒன்றிணைத்து, ஆவியின் உதவியுடன், நம் பிதாவை நாடி அவரை கணப்படுத்தவும் , மகிமைப்படுத்தவும், அவருடைய பிரசன்னத்தில் நம்முடைய ஆசீர்வாதத்தை தேடுவோமாக.

என்னுடைய ஜெபம்

மேன்மையுள்ளவரே, இஸ்ரேலின் பரிசுத்தரே , என் பிதாவே, என் தேவனே, நான் உம்மை என் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்மாவோடும், பலத்தோடும் தேடுகிறேன்.நான் உம்மை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்க்கையில் உம் வழிநடத்துதல் மற்றும் உம் சித்தத்திற்கு நான் முழுமையாக ஒப்புக்கொடுக்க விரும்புகிறேன். இன்று என் அருகிலேயே இருங்கள் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து