இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு ஊழியக்காரர் என்ற முறையில் சபை மக்களுடைய வாழ்வில் நடக்கும் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த ஊழிய பாதையில் இருப்பது ஒரு பரிசுத்த நம்பிக்கை. அந்த கடினமான தருணங்களில் - சோகம், பேரழிவு, மரிக்கும் தருவாய் மற்றும் மரணம் - இது போன்ற வசனங்கள் என் இருதயத்தை பெலப்படுத்துகிறது, மேலும் எனக்கு ஒப்புவிக்கப்பட்டுள்ள ஊழியத்திலே வந்த போராட்டங்களின் மத்தியிலே நான் பெற்ற அழைப்பை ஏற்றுக்கொண்டேன் என்பதை அந்த வாக்குறுதி எனக்கு நினைப்பூட்டுகிறது. மேலே கூறிய தேவனின் வாக்குறுதி, அவர் எகிப்திலிருந்து தம்முடைய ஜனங்களை மீட்டெடுத்து அவர் துவங்கியதை , அவர் வாக்களித்த தேசத்திற்குள் கொண்டுவந்து சேர்த்து முடித்தார் என்பதை நினைப்பூட்டுகிறது. இப்போது, ​​பிலிப்பியர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுலின் உபதேசம் மற்றும் எழுத்து மூலம் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இன்னும் வல்லமையுள்ள வாக்குத்தத்தை நாம் கேட்கலாம். . ..உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, " (பிலிப்பியர் 1:5). இயேசுவின் நிமித்தம், இன்றைக்கு நம்முடைய வசனத்தில் தேவனுடைய வாக்குறுதிகளை நம்புவதற்கு கூட நமக்கு நம்பிக்கை இருக்கிறது. தேவன் சொன்னதை இஸ்ரவேலுக்காக செய்தார். அவர் அவர்களுக்காக அதைச் செய்ததால், நாமும் நம்பிக்கையுடன் கூறுகிறோம், "உம் மாறாத அன்பினால், நீர் மீட்டுக்கொண்ட உம் மக்களை உமது பரிசுத்த வாசஸ்தலத்திற்கு அழைத்துச் செல்வீர்கள்."

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள மேய்ப்பரே, நீர் சில கடினமான காலங்களில் என்னை வழிநடத்தி பாதுகாப்பாக கொண்டு வந்தீர். நான் உமக்காக வாழ முற்படுகையில், தயவுசெய்து உம் மாறாத பிரசன்னத்தை வெளிப்படுத்தும் . உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நீர் என்னை வழிநடத்துகிறீர் என்று நான் மெய்யாக விசுவாசிக்கிறேன் , ஆனால் , சில நேரங்களில், வாழ்க்கையின் பாதை கடினமாகிறபோது , மேலும் நம்பிக்கையாய் இருப்பதும் கடினமாகிறது என்று அறிக்கையிடுகிறேன் . தயக்கமுள்ள மோசேயையும் மற்றும் சோதிக்கப்படாத யோசுவாவைப் போலவே, ஆண்டவரே, அடியேனுக்கு தைரியத்தைப் புதுப்பித்தருளும். பின்னர், அன்பான ஆண்டவரே, மற்றவர்கள் உமது வாக்குறுதியையும், அவர்கள் உமக்கான வழியையும் கண்டறிய அடியேனை எடுத்து பயன்படுத்தியருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து