இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய கிருபையினால் நாம் நீதிமான்களாய் இருக்கிறோம். தேவன் உண்மையுள்ளவராய் இருப்பதின் காரணமாக நாம் நினைவுகூரப்படுகிறோம். தேவன் உண்மையுள்ளவராய் இருப்பதினால் நமக்கு செவிகொடுக்கிறார். தேவன் தேவனாய் இருப்பதினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே என்னுடைய தேவைகளை நோக்கி பார்ப்பதற்காகவும், என் அழுகையை கேட்பதற்காகவும், என் ஜெபத்திற்கு பதிலளிப்பதற்காகவும், இறங்கிவந்து என்னை இரட்சித்து, ஆறுதல்படுத்தி, ஆசீர்வதித்ததற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து