இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தர் நம்..... அருகில்,.... இப்பொழுது ..... நெருக்கமாக... ! நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும் ? அவர் தொழுவத்தின் முன்னணையிலே நம் அருகில் வந்தார். அவர் நம்முடனே கூட ஊழியத்திலே நடந்தார். அவர் நமக்காக நம்முடனே கல்வாரியிலே பாடுபட்டார். நம்முடைய பாடுகளிலும், சோதனைகளிலும், இருதயம்நொறுங்குண்ட நேரத்திலும், உடைக்கப்பட்ட வேளையிலும் அவர் நம் அருகிலிருந்து நம்மை இரட்சிக்கிறார். எனவே, நம் இருதயம் அவருக்காக திறந்திருக்குமா, நாம் அவரை நம் அருகில் வரத் தேடுவோமா?. நம்முடைய பிரச்சனைகள், இருதயத்தின் வியாகுலங்கள், தேவனிடமிருந்து விலகிச் செல்ல அல்லது அவருடைய நெருக்கமான சமூகத்தை சந்தேகம் கொள்ள அனுமதிக்காதீர்கள். அவர் நம்மோடு நெருங்கி ஜீவிப்பாராக.

என்னுடைய ஜெபம்

தேவனே தயவுகூர்ந்து இன்று என்னோடு என் அருகில் இருப்பீராக. உம்முடைய சமூகம் என் வாழ்வில் இருப்பதை விளங்கச்செய்யும். இருதயத்தில் ஏமாற்றத்தோடும், உடைக்கப்பட்டும், விசுவாசத்திலே போராடிக்கொண்டிருக்கிற எனக்கு அறிமுகமானவர்களை நீர் ஆசீர்வதிக்க உம்மை கேட்கிறேன். நீர் அவர்களுடைய வாழ்க்கையில் பிரகாசமாய் இருக்கிறீர் என்பதை புரிந்து கொள்ள தயவு பாராட்டியருளும். இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து