இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று தேவனிடமிருந்து தெளிவான, எளிமையான, நேரடியான வார்த்தை உங்களுக்கு வேண்டுமா? அதைத்தான் சகரியா தீர்க்கதரிசியானவர் நமக்கு கூறுகிறார் . நாம் நியாயமானவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், அக்கறையுள்ளவர்களாகவும், பாரபட்சமின்றி, தேவைப்படுபவர்களிடம் கனிவான உள்ளம் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கும்படி தேவனானவர் விரும்புகிறார் என்பதை அவர் இந்த வார்த்தையின் மூலமாக நமக்கு நினைப்பூட்டுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிறிஸ்து ஜனங்களை நடத்தியது போல நாமும் ஒருவரையொருவர் நடத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஏன்? ஏனென்றால் நாம் தேவனுடன் நீதியுள்ளவர்களாகவும் , அதேவேளையில் ஜனங்களுடன் அநீதியுள்ளவர்களாகவும் இருக்க முடியாது! இது மீகா தீர்க்கதரிசியின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை என் நினைவுக்கு கொண்டு வருகிறது : மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். ( மீகா-Micah :6- 8 )

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , பரிசுத்த வேதாகமத்தில் உள்ள புரிந்துகொள்ள முடியாத வசனங்களால் நான் சிக்கிக்கொண்ட நேரங்களுக்காகவும், மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்ளவது என்பது குறித்த உம்முடைய தெளிவான போதனையை புறக்கணித்ததற்காகவும் அடியேனை மன்னித்தருளும் . இன்று நீர் எனக்குக் கட்டளையிட்டதை செய்ய இந்த வாரத்திலே எனக்கு அந்த வாய்ப்பபைத் தாரும் . எதிர்காலத்தில், என் இருதயம் அன்பில்லாமல் அல்லது மற்றவர்களுக்கு நான் எப்படி பதிலளிக்க வேண்டுமோ அப்படி செய்யாத போது, ​​​​உம்முடைய ஆவியைப் பயன்படுத்தி , இந்த வாக்கியத்தை என் நினைவில் வைத்துக் கொள்ள எனக்கு உதவிச் செய்யும் , இதனால் நான் என் வாழ்க்கையில் உம் சித்தத்தின்படி வாழ்ந்து உமக்கு மகிமையை கொண்டு வருவேன் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து