இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தன் கையின் பலத்தினாலும், செல்வாக்கினாலும் சத்தியத்தை வாங்க முடியாது, ஒவ்வொருவரும் அவர் அவருடைய செய்கைக்கு தக்க பலனை எதிர்க்கொள்ள ஒரு கடைசி நேரத்தை தேவன் நிர்ணயித்துள்ளார். தீமைக்கு பங்காளிகளாக இருப்பவர்களை தீமையே முறியடிக்கும். நல்லவர்களையும், நீதிமான்களாயிருப்பவர்களையும் வெறுப்பவர்கள் கண்டிக்கப்படத்தக்கவர்கள். தேவனின் நீதியும், சத்தியமும் , நியாயமும் எப்பொழுதும் தடைப்படாது !

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம் பரிசுத்த ஆவியின் பரிசுத்தப்படுத்தும் கிரியையின் மூலமாக அடியேனை சுத்தமாகவும் முழுமையுடனும் இருக்கச் செய்ததற்காக உமக்கு நன்றி. நீதியாய் நடக்க எனக்கு போதியும். பாவம் மற்றும் தீமையின் மீது வெறுப்பை வளர்க்க எனக்கு உதவுங்கள். தீய பழக்கத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு, உதவ என்னைப் எடுத்து பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து