இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தனது கிருபையால் உலகை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.நாம் எங்கிருக்கிறோமோ அங்கே நம்மைச் சுற்றியுள்ளவர்களை சந்திக்க தொடங்க வேண்டும். பின், நம் பகுதியில் உள்ளவர்களுடன் இயேசுவைப் பற்றிய வரலாற்று உண்மைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் . பிறகு நாம் உலகெங்கும் சுவிஷேத்தை கொண்டு செல்ல வேண்டும் . நாம் நம்மை உபயோகப்படுத்த ஒப்புக் கொடுக்க முன்வருகையில், பரிசுத்த ஆவியின் வல்லமையும், சமூகமும் நம்முடன் செல்லும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம்முடைய கிருபையினால் என்னைச் சுற்றி வாழ்கிறதான மக்களை சந்திக்க என்னை பயன்படுத்தும். எங்களுடைய பகுதியில் இயேசுவை குறித்து பகிர்ந்து கொள்ளும் சபையாரை ஆசீர்வதியும். பிதாவே, உலகமெங்கும் சுவிசேஷத்தை அறிவிக்க எடுக்கும் எல்லா முயற்சியையும் ஆசீர்வதியும். இயேசுவை குறித்த நற்செய்தியை கொண்டு எல்லா தேசங்களையும் சந்திக்கும் உம்முடைய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற அடியேனை பயன்படுத்திக்கொள்ளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து